பண்ருட்டியில்புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
பண்ருட்டியில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
பண்ருட்டி,
உலக புகையிலை ஒழிப்பு நாளை முன்னிட்டு, பண்ருட்டியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பண்ருட்டி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் மாலினி கலந்து கொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். ஒறையூர் வட்டார மருத்துவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அபிநயா திட்ட நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் திட்ட மேலாளர் செல்வம், திட்ட மேற்பார்வையாளர் கதிரவன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட பேரணி நான்குமுனை ரோடு வழியாக சென்று பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் மாணவிகள் புகையிலையின் தீமைகள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தியபடி பேரணியாக வந்தனர்.
விழிப்புனர்வு பேரணியில் பாரா மெடிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், புதுப்பேட்டை நந்தகுமார், பண்ருட்டி ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.