புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
தலைஞாயிறில் புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வாய்மேடு:
தலைஞாயிறு வட்டாரத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரி முதல்வர் பாலசுந்தரி தலைமை தாங்கினார். தலைஞாயிறு மருத்துவ அலுவலர் டாக்டர் சுபசங்கேஸ்வரி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் புகை பிடித்தல் மற்றும் குட்கா பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து கூறப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, தாயுமானவன், நாகராஜ், விக்ேனஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.