கார் வெடிப்பு குறித்து எந்த பதிவும் போடவில்லை
சமூகவலைத்தளத்தில் கார் வெடிப்பு குறித்து எந்த பதிவும் போடவில்லை என நடிகை காயத்ரி ரகுராம் கூறினார்.
வடகோவை
பா.ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் வடகோவையில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.
மாநில துணை தலைவர் ஏ.பி.முரு கானந்தம் முன்னிலை வகித்தார். இதில், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து வெளிநாட்டில் வேலைக்காக அதிகம் பேர் செல்கின்றனர்.
இதில் பலர் கும்பலிடம் மாட்டி கொள்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்க ளை மத்திய அரசு மீட்டு கொண்டு வந்தது. திராவிட இயக்கத்தி னர் தமிழை வளர்க்கவில்லை.
ஆங்கிலத்தையே வளர்த்தனர். தமிழகத்தில் ஆங்கில பள்ளிக்கூடங்களே அதிகளவில் உள்ளது. எனவே தமிழக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தி எங்கும், யாரிடமும் திணிக்கப்பட வில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, டுவிட்டர் பக்கத்தில் 1998-ம் ஆண்டு போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது போல பதிவு செய்து உள்ளீர்களே என காயத்ரி ரகுராமிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், அது போன்ற பதற்றமான நிலையை உருவாக்க நான் எந்த பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு நீங்கள் தான் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகிறீர்கள் என்றார்.