ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதியில்லை - வனத்துறை

ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-07-22 15:10 GMT

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாகும். இங்கு நாமக்கல் மட்டுமின்றி சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா வருவது வழக்கம்.

அவர்கள் அங்குள்ள அறப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், சர்ப்ப விநாயகர் கோவில், பூங்கா ஆகிய இடங்களை சுற்றி பார்த்துவிட்டு செல்வார்கள். மேலும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவியில் குளித்து மகிழ்வார்கள்.

இந்த நிலையில், ஆகாய கங்கை செல்லும் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்