சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி இல்லை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இரவு தங்க அனுமதி இல்லை என சப்-கலெக்டர் கூறினார்.

Update: 2022-10-02 19:12 GMT

சிவகாசி, 

சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆனந்தவல்லி அம்மன் கொலு திருவிழாவை நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இரவு நேரத்தில் மலையின் மீது யாரும் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். மலைக்கு சென்றவர்கள் மாலை 6 மணிக்குள் கீழே இறங்கி விட வேண்டும். வனப்பகுதியில் ஆடு, கோழி பலியிட்டு சமையல் செய்ய அனுமதி கிடையாது. இதையும் மீறி அனுமதி இன்றி வனப் பகுதிக்குள் செல்பவர்கள் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்