முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

முதல் நாளில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

Update: 2022-06-20 13:11 GMT

கிணத்துக்கடவு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியாக உள்ள நெம்பர் 10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் நல்லட்டிபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினர், சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர், குருநெல்லிபாளையம் 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அடுத்த மாதம்(ஜூலை) 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வருகிற 27-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. முதல் நாளான இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

Tags:    

மேலும் செய்திகள்