எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது; இல்லையெனில் தகுதியற்றவராகி விடுவீர்கள் - கவர்னர் ஆர்.என்.ரவி அறிவுரை
எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது; இல்லையெனில் தகுதியற்றவராகி விடுவீர்கள் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை,
யு.பி.எஸ்.சி தேர்வர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிடக் கூடாது; இல்லையெனில் நீங்கள் தகுதியற்றவராகி விடுவீர்கள். குடிமைப் பணியாளர்கள் சில நேரத்தில் தவறான முடிவை எடுக்க நேரலாம்.
நானும் சில தவறான முடிவுகளை எடுத்துள்ளேன். மாறி வரும் உலகிற்கு ஏற்றவாறு அனைத்தையும் எதிர்கொள்ள பழைய பாடத்திட்டத்தை மாற்றுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.