நரிக்குடி யூனியன் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு

நரிக்குடி யூனியன் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற்றது.

Update: 2023-03-03 19:20 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி பஞ்சாயத்து யூனியனில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். யூனியன் தலைவராக பஞ்சவர்ணம் இருந்து வந்தார். இவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

அதன் அடிப்படையில் நரிக்குடி யூனியன் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கவுன்சிலர்கள் கூட்டம் நடத்த அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் நியமிக்கப்பட்டார். நேற்று பகல் 11 மணிக்கு ஆர்.டி.ஓ. தலைமையில் இந்த கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் யூனியன் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் கூறும்ேபாது, "நரிக்குடி யூனியன் கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பு சம்பந்தமான அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்