விமான விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லை: பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்

விமான விபத்துக்கான சாத்தியக்கூறுகள் இல்லை, பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-28 19:40 GMT

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வனப்பகுதியில் ராணுவ விமானம் விழுந்ததாக பரவிய தகவல் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-

ராணுவ விமானம் விழுந்ததாக கூறப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட சத்தத்திற்கான காரணம் குறித்து போலீசார் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு விமான விபத்து நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தெரியவில்லை. இது குறித்து விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட கேட்டபோது, எந்த விமான விபத்தும் நடைபெறவில்லை என்றும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும்‌ பயிற்சி விமானங்கள் தாழ்வாக பறக்கும்போது அதிக சத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் தெரிவித்தனர். எனவே மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம், பகிர வேண்டாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்