தூத்துக்குடியில் தொழில் உரிம கட்டணம் செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு

தூத்துக்குடியில் தொழில் உரிம கட்டணம் செலுத்தாத 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2022-06-09 14:52 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தொழில் உரிம கட்டணம் செலுத்தாத 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

உரிம கட்டணம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் உரிமத்தை புதுப்பிக்காமலும், தொழில் உரிம கட்டணம் செலுத்தாமலும் இயங்கி வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து அந்த கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டன. ஆனாலும் பல கடைகள் தொடர்ந்து தொழில் உரிமத்தை புதுப்பிக்காமலும், கட்டணம் செலுத்தாமலும் செயல்பட்டு வந்தன.

3 கடைகளுக்கு சீல் வைப்பு

இதனை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் பாளையங்கோட்டை ரோடு, திருச்செந்தூர் ரோடு, எட்டயபுரம் ரோடு, சிதம்பரநகர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடை, மளிகை கடை, ஓட்டல் உள்ளிட்ட 16 கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது 13 கடைகளின் உரிமையாளர்கள் உடனடியாக உரிம கட்டணத்தை செலுத்தினர். ஆனால் 3 கடை உரிமையாளர்கள் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் அந்த 3 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்