பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

வாக்களிக்கும் மக்களை மட்டுமே அ.தி.மு.க. நம்புகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Update: 2024-02-11 08:41 GMT

கிருஷ்ணகிரி,

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இறுதியாக கூறுகிறோம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது ,

மக்கள் மீது வரிச் சுமையை ஏற்றி தி.மு.க. அரசாங்கம் நடத்துகிறது . அத்தியாவசியப் பொருட்களின் விலை 40% உயர்ந்துள்ளது .மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாங்கமாக தி.மு.க. இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைக்கும் காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் பாதுகாப்பாக உணருவார்கள்.

பாஜகவுடன் அ.தி.மு.க.  மறைமுக உறவு வைத்திருப்பதாக சிலர் கூறுகிறார்கள். முன்பே அறிவித்துவிட்டோம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். சரியான நேரத்தில், அ.தி.மு.க. கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க தி.மு.க. மறுக்கிறது. வாக்களிக்கும் மக்களை மட்டுமே அ.தி.மு.க. நம்புகிறது. என தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்