பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
நாகை,
தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதால் பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. திரிகோணமலைக்கு 115 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.