கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் உருவானதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர்:
மேற்குவங்காளம் மற்றும் வங்காளதேசம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை உருவானது. இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்குவங்காளத்துக்கும், வங்காளதேசத்துக்கும் இடையே நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று காலை கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும். இதனால் தமிழக கடற்கரை பகுதியில் எந்தவித மாற்றங்களும் இருக்காது என வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.