என்.எல்.சி. தொழிலாளி தற்கொலை

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-20 18:45 GMT

மந்தாரக்குப்பம், 

நெய்வேலி 27-வது வட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் ரவி (வயது 48). இவர் என்.எல்.சி. சுரங்கம் 2-ல் இன்கோசர்வ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் வீட்டின் தோட்டத்து பகுதிக்கு சென்ற அவர் திடீரென அங்கிருந்த ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அவரது மகன் விக்னேஷ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவலின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்