நெய்வேலி அருகே கார் மோதி என்.எல்.சி. தொழிலாளி பலி

நெய்வேலி அருகே கார் மோதி என்.எல்.சி. தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-06 19:44 GMT


கம்மாபுரம்,

ஊமங்கலம் அடுத்த புது இளவரசன்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் பச்சைக்கண்ணு (வயது 52). என்.எல்.சி. இன்கோசர்வ் (சொசைட்டி) தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மந்தாரக்குப்பத்தில் இருந்து சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நெய்வேலி அடுத்த விருத்தாசலம்-கடலூர் சாலையில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பச்சைக்கண்ணுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பச்சைக்கண்ணு பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்