என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

நெய்வேலியில் என்.எல்.சி. தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

Update: 2022-09-16 19:04 GMT

நெய்வேலி, 

நெய்வேலி டவுன்ஷிப் 2-வது வட்டம் மெட்ராஸ் ரோடு என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் சிவராமன்(வயது 56). இவர் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நிரந்தர தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 மாதமாக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சொந்த கிராமமான அணுக்கம்பட்டு கிராமத்தில் தங்கி விவசாய வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சிவராமன் நெய்வேலியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்ததன. மேலும் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இருந்த பீரோவை சோதனை செய்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுப்போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்