நித்திய கல்யாணி அம்மன் கோவில் தெப்ப திருவிழா
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் தெப்ப திருவிழா நடந்தது.;
கடையம்:
கடையத்தில் இருந்து ராமநதி அணை செல்லும் வழியில் பிரசித்தி பெற்ற வில்வ வனநாதர் - நித்திய கல்யாணி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளன்று தெப்ப திருவிழா நடைபெறும். இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
விழாவை முன்னிட்டு காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் தெப்பத்திற்கு எழுந்தருளினர். தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்த பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவி்ல் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.