கிணத்துக்கடவு
சிவபெருமானுக்கு விருப்பமான மலராக பிரம்ம கமலம் என்று அழைக்கப்படும் நிஷாகந்தி பூ உள்ளதாக கூறப்படுகிறது. மிகுந்த மணம் கொண்ட இந்த பூவானது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. அதுவும் இரவு நேரம் பூத்து அதிகாலையில் வாடிவிடும். இந்த நிலையில் கிணத்துக்கடவு விவேகானந்தர் வீதியில் ஒருவரது வீட்டில் நிஷாகந்தி செடி வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த செடியில் நேற்று முன்தினம் இரவில் 36 பூ பூத்தது. அந்த பூக்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் வழிபாடு நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.