நீலகிரி: அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு !

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2022-06-21 06:37 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டு யானைகள் அரசு பேருந்தை வழிமறித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. அரசு பேருந்து ஒன்று கோவையில் இருந்து மஞ்சூருக்கு சென்றுகொண்டு இருந்தது.

அப்போது பேருந்து கெத்தை அருகே சென்றுகொண்டிருந்தபோது, காட்டு யானைகள் கூட்டம் திடீரென பேருந்தை வழிமறித்தது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.

இதையடுத்து யானை கூட்டமானது பேருந்துக்கு வழி விடாமல், சாலையிலேயே சிறிது தூரம் சென்றது. இதனால், பேருந்து ஓட்டுனர் பேருந்தை யானைகளின் பின்னால் சுமார் 20 நிமிடங்கள் மெதுவாக இயக்கினார். பின்னர் யானை கூட்டம் சாலையை விட்டு காட்டு பகுதிக்கு சென்றவுடன், பயணிகள் நிம்மதியடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்