நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா
முடிவைத்தானேந்தலில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சாயர்புரம்:
தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ராஜ செல்வி உத்தரவின் பேரில் முடிவைத்தாேனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்தா மருத்துவ பிரிவு சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் விழா பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவி ரம்யா தலைமை தாங்கினார். ஆயுஸ் மருத்துவ டாக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அதிகாரி சிவபெருமாள், ஊராட்சி செயலாளர் நல்லசிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.