நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகம் முற்றுகை
100 நாள் வேலை கேட்டு நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள சிவஞானபுரம் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் 100 நாள் வேலை வழங்க கோரி நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயசந்திரிகா பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களை சமதானப்படுத்தி வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறினார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சிவஞானபுரம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தியிடம் கேட்டபோது, எந்தவிதமான தகவலும் சொல்லாமல், 100 நாள் வேலை தேர்வு செய்யப்பட்டது. இதனால் அதை நாங்கள் அனுமதிக்கவில்லை என்றார்.