நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம்

நிலக்கோட்டையில், பேரூராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2022-10-29 16:28 GMT

நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், பேரூராட்சி தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் முருகேசன், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைத்தல், மைக்கேல் நகர் சுற்றுச்சூழல் அமைத்தல், புதிதாக சமுதாய கழிப்பறை, ஆழ்துளை கிணறு அமைத்தல், மாரியம்மன் கோவில் பாதையில் வடிகால் வசதி ஏற்படுத்துதல், காமாட்சிபுரத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், ஒரு வார்டுக்கு சபா உறுப்பினர்களாக 4 பேரை தேர்வு செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்