மதுரையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை - 2 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்

மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். 2 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

Update: 2023-05-09 20:37 GMT


மதுரையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். 2 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

தடை விதிப்பு

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில அமைப்புகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. அந்த அமைப்புகளின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன

இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய, மாநில நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள், மேலும் அதன் நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்துச்சென்று விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து செயல்பாடுகளில் இருந்து வருவதாகவும், சட்ட விரோத பண பரிமாற்றம் நடப்பதாகவும் கூறி என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.

மதுரை

மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகியும், முன்னாள் எஸ்.டி.பி.ஐ. நிர்வாகியுமான அப்பாஸ் என்பவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். பின்னர் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அதே போன்று தெப்பக்குளம் பகுதியில் தமிழன் தெருவில் யூசுப் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அவரது வீட்டிலும் ஆவணங்கள், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி, விசாரணைக்காக அவரை அழைத்து சென்றதாக தெரிகிறது. ஆனால் அவர்களை அதிகாரிகள் எங்கு அழைத்து சென்றனர் என்ற விவரம் தெரிவிக்கவில்லை.

4 இடங்களில் சோதனை

என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைக்கு வருவதையொட்டி மதுரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் போலீசார் முக்கிய பகுதிகளில் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் அதிகாரிகள் சோதனையின் போது அந்த பகுதியில் யாரையும் உள்ளே விடாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர்.

அதே போன்று வில்லாபுரம், பேரையூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மதுரை மாவட்டத்தில் 4 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்