வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-14 18:45 GMT

திருப்புவனம், 

திருப்பாச்சேத்தி அருகே உள்ள பி.வேலாங்குளத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 23). இவருக்கும், மாத்தூரை சேர்ந்த ஊர்காவலன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் ஊர்காவலனின் சித்தப்பா பழனிக்குமார்(35) என்பவர் மாத்தூர் விலக்கில் நின்றிருந்தார். அப்போது அங்கு சென்ற சூர்யா மற்றும் அவரது நண்பர்கள், ஊர்காவலனை கேட்டு பழனிகுமாரை வாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பழனிகுமார் திருப்பாச்சேத்தி போலீசில் சூர்யா மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் மீது புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த பழனிக்குமார் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்