ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Update: 2023-01-04 18:46 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம், மருந்தகம் மருந்து ஆய்வு கிடங்கு ஊசி போடும் அறை பதிவு செய்யும் அறை புறநோயாளிகள் பிரிவு தொற்றுநோய் பரிசோதனை கூடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக மக்கள் உயர்ந்த சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாடலின் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கிராமப்புற பகுதிகளிலும் உயர்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை காத்திருக்க வைக்காமல் உடல்நிலை பற்றி தெளிவாக கேட்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தமாக வைப்பதோடு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார். ஆய்வின்போது மருத்துவ அலுவலர் அசோக், மருத்துவர் காயத்ரி மற்றும், சுகாதார நிலைய பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்