பிளஸ்-௨ மாணவியை கடத்திய வாலிபர் கைது

பொம்மிடி அருகே பிளஸ்-௨ மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-20 15:49 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சுரேந்தர் (வயது 21) என்ற வாலிபர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. அவரிடம் இருந்தும் மாணவியை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் சுரேந்தரை பொம்மிடி போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்