அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
அரசு பஸ் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை;
சோலார் அருகே இரணியன் வீதியை சேர்ந்தவர் அருண் (வயது 37). அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி திவ்யா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 5-ந் தேதி மகள்களுடன் பெற்றோர் வீட்டுக்கு திவ்யா சென்று உள்ளார்.
இந்த நிலையில் தனியாக இருந்த அருண், வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அருண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.