கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள்

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

Update: 2023-09-24 18:40 GMT

திருப்பத்தூர் மாவட்ட அளவிலான கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலர் பிரபாகரன் வரவேற்றார்.

இதில் நடனம், நாடகம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ற உள்ளனர்.

இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்