புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஊட்டி மலை ரெயில் எஞ்சின் - உலை ஆயிலுக்கு பதில் அதிவேக டீசல் பயன்பாடு

அதிவேக டீசலை பயன்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-10-06 00:31 GMT

திருச்சி,

ஊட்டி மலை ரெயில் எஞ்சிகள் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டாலும், அவற்றை ஆன் செய்வதற்கு உலை ஆயில் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் அந்த எஞ்சினை ஆன் செய்யும் போது அதிக அளவில் புகை வெளியேறி மாசு ஏற்படுத்தியது.

இதனால் உலை ஆயிலுக்கு பதிலாக அதிவேக டீசலை பயன்படுத்தும் வகையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் புதிய ரெயில் எஞ்சின் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய தொழில்நுட்பத்துடன் தயாராகியுள்ள இந்த எஞ்சினை 70 பொறியாளர்கள் கடந்த 7 மாதங்களாக உருவாக்கியுள்ளனர்.

இதற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், திருச்சி பொன்மலையில் ரெயில்வே பணிமனையில் இருந்து அந்த எஞ்சின் லாரி மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்