அறந்தாங்கியில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அறந்தாங்கியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது.

Update: 2023-03-11 19:16 GMT

அடுக்குமாடி குடியிருப்பு

தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஏழைகள் மற்றும் வீடுகள் இல்லாதவர்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவருக்கும் வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகளாக கட்டப்பட்டு பொதுமக்களிடம் குறிப்பிட்ட அளவு பணம் பெற்று வழங்கப்படுகிறது. அந்த வகையில் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் 120 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. தரைத்தளம் மற்றும் 3 தளங்களுடன் 3 பிளாக்குகள் இந்த குடியிருப்பு கட்டப்பட்டுள்ளன. கட்டிட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

பயனாளிகள் தேர்வு

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, ''கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயனாளிகள் பலருக்கு வீடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் கிடைத்த நிலையில் கூத்தாடிவயலில் கட்டப்படும் குடியிருப்புகள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் கட்டப்படுகிறது. ஏழைகள் மற்றும் வீடற்றவர்கள் வீடு வசதி கோரி கலெக்டர் அலுவலகம் மற்றும் முகாம்களில் மனுக்கள் அளித்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்பு ஒதுக்கப்பட உள்ளது.

கட்டுமான பணிகள் பெருமளவு முடிந்து விட்டன. கட்டிடத்தில் சில இறுதிக்கட்ட பணிகளும், சாலை வசதியும் அமைக்க வேண்டி உள்ளது. அதன்பின் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பயன்பாட்டிற்கு வரும்'' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்