வால்பாறையில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு

வால்பாறையில் புதிய தாசில்தார் பொறுப்பேற்றார்.

Update: 2022-06-03 15:29 GMT

வால்பாறை

வால்பாறை தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த தாசில்தார் கிணத்துக்கடவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பொறுப்பு தாசில்தாராக ஜெகதீசன் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வால்பாறை தாலுகா அலுவலகத்திற்கு புதிய தாசில்தாராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தனித்தாசில்தார் ஜெகதீசன் தலைமையில் தலைமையிடத்து துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் புதிய தாசில்தாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்