பருவத்துக்கு ஏற்ற புதிய ரக விதைகளை விற்க வேண்டும்;வேளாண் அதிகாரி தகவல்
பருவத்துக்கு ஏற்ற புதிய ரக விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தெரிவித்து உள்ளார்.
பருவத்துக்கு ஏற்ற புதிய ரக விதைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தெரிவித்து உள்ளார்.
விதை கொள்முதல்
ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மொத்த மற்றும் சில்லரை விதை விற்பனையாளர்கள், தரமான சான்று பெற்ற விதைகளை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் சான்று பெற்ற விதைகளுக்கான உரிய படிவம், தனியார் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற வேண்டும். இந்த ஆவணங்களை ஆய்வின்போது காண்பிக்க வேண்டும்.
புதிய ரகம்
புதிய ரக விதைகள் இந்த பருவத்துக்கு ஏற்றதா? என்பதை அறிந்து கொள்முதல் செய்து விற்க வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை சாகுபடி செய்வதால், நடவு செய்தவுடன் கதிர் வராமல் இருத்தல் போன்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கொள்முதல் செய்த விதைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது விதை விற்பனை தடை விதிப்பதுடன், உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை, கொள்முதல் பட்டியல், பதிவு சான்று, விற்பனை பட்டியல் ஆகிய ஆவணங்கள், பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். விதை சட்ட விதிகளை மீறுவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் துணை இயக்குனர் சுமதி கூறி உள்ளார்.