கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமத்தில் புதிய மின்மாற்றி இயக்கி வைக்கப்பட்டது.

Update: 2022-07-05 15:34 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே கண்டுகொண்டான்மாணிக்கம் கிராமத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் மின்வினியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் அறிவுறுத்தலின் பேரில் உதவி செயற்பொறியாளர் ரவீந்திரன் மேற்பார்வையில் 63 கிலோ வாட் அளவிலான புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. நிகழ்ச்சியில் சாத்தான்குளம் மின்வாரிய உதவி பொறியாளர் எட்வர்ட் மற்றும் மின்வாரிய ஊழியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்