ரூ.6.16 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
உடன்குடி அருகே ரூ.6.16 லட்சத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு உள்ளது.
உடன்குடி:
உடன்குடி அருகே செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிவலுர் பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்தனர். இதைஏற்று செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதையடுத்து ரூ.6.16 லட்சம் மதிப்பீட்டில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது.
சிவலூர் ஊர் தர்மகர்த்தா முருகன் தலைமை தாங்கினார். செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
இதில் உடன்குடி உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) மகாலிங்கம், உடன்குடி நகர் இள மின்பொறியாளர் உமாமகேஸ்வரி, உடன்குடி ஊரகம் இளமின் பொறியாளர் சூசைராஜ், உடன்குடி மற்றும் மின்வாரிய பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.