கட்டளைப்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்
கட்டளைப்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர் அசோகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;
சிவகாசி,
சிவகாசி கோட்டத்தில் உள்ள சாட்சியாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கட்டளைப்பட்டி கிராமத்தில் அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் இருந்து வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து கட்டளைப்பட்டி பகுதியில் ரூ.11 லட்சத்து 10 ஆயிரம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவப்பட்டது. இதன் தொடக்க விழாவில் அசோகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார். இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள 80 வீடுகளுக்கு குறைந்த மின் அழுத்தம் இல்லாமல் சீரான முறையில் மின்சாரம் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மின்வாரிய அதிகாரி பாவநாசம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.