சில்லாம்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்
சில்லாம்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட சில்லாம்பட்டி கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு டிரான்ஸ்பார்மரை திறந்து வைத்தார். முன்னதாக சி.கே.ஆர்.நிறுவன இயக்குனர் நெடுமரம் இளங்கோவன் வரவேற்றார். திருப்பத்தூர் செயற்பொறியாளர் செல்லத்துரை, தேவகோட்டை கோட்டாட்சியர் பால்ராஜ், ஒன்றிய சேர்மன் சண்முகவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து கிராம மக்களின் சார்பில் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் கே.பி.எஸ்.பழனியப்பன், உதவி செயற்பொறியாளர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.