திருவாடானை-ஏம்பல் இடையே புதிய டவுன் பஸ் வசதி

திருவாடானை-ஏம்பல் இடையே புதிய டவுன் பஸ் வசதியை கருமாணிக்கம் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-17 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை பஸ் நிலையத்தில் புதிய பஸ் வழித்தட ெதாடக்க விழா நடைபெற்றது. திருவாடானையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வரை அரசு டவுன் பஸ் புதிய வழித்தடம் தொடங்கப்பட்டது. திருவாடானை, மங்களக்குடி, நீர்க்குன்றம், கண்ணங்குடி, கேசரி வழியாக ஏம்பல் வரை தினமும் 2 முறை இயக்கப்படும் புதிய பஸ் வழித்தடத்தை கருமாணிக்கம் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டல பொது மேலாளர் சிங்காரவேல், திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், அரசு போக்குவரத்து கழக தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், வணிக மேலாளர் நாகராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செங்கமடை சரவணன், பதனக்குடி ரவி, மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் முருகானந்தம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன், குளத்தூர் ஊராட்சி தலைவர் குமார், தி.மு.க. நகரச் செயலாளர் பாலமுருகன், நகர் காங்கிரஸ்தலைவர் செந்தில்குமார் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்