ரூ.6 லட்சத்தில் புதிய கழிவறைகள்
நாங்கூரில் ரூ.6 லட்சத்தில் புதிய கழிவறைகள் ரூ.6 லட்சத்தில் புதிய கழிவறைகள்
திருவெண்காடு:
திருவெண்காடு அருகே நாங்கூரில். சுவாமி விவேகானந்தா அபிவிருத்தி சங்கம் நடத்தும் ஓராசிரியர் பள்ளிகள் மூலம் பாரதப் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் குளியலறைகளுடன் 12 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.இந்த கழிவறைகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜகுமார், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓராசிரியர் பள்ளிகளின் அமைப்பாளர் கே. ஜெகதீசன் வரவேற்றார். தூய்மை இந்தியா திட்டத்தின் தமிழக பொறுப்பாளர் வைத்தியநாதன் பேசினார். விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தின் நிறுவனர் எஸ்.வேதாந்தம், ஓராசிரியர் பள்ளிகளின் கவுரவ செயலாளர் கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளிடம், கழிவறைகளை ஒப்படைத்தனர்.