புதிய சப்-கலெக்டர் பொறுப்பேற்பு

புதிய சப்-கலெக்டர் பொறுப்பேற்பு

Update: 2022-10-15 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்-கலெக்டராக தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் மத்திய அரசு பணியில் உதவி செயலாளராக பதவி வகித்த 2020-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி உதவி செயலாளரான எஸ்.பிரியங்கா பொள்ளாச்சி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சப்-கலெக்டர் எஸ்.பிரியங்காவிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதை தொடர்ந்து புதிய சப்-கலெக்டருக்கு நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தனி தாசில்தார் தணிகவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயசித்ரா, துணை தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் கருப்பையா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகிகள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சப்-கலெக்டர் எஸ்.பிரியங்கா கூறுகையில், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவர், கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் ஆவார். ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் பயிற்சி பெற்று உள்ளார்.

இதற்கிடையில் சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை உதவி கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்