திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவுக்கு புதிய ஸ்கேனர் எந்திரம்
திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவுக்கு புதிய ஸ்கேனர் எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவுக்கு ரூ.12 லட்சம் செலவில் புதிதாக எக்ஸ்ரே ஸ்கேனர் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை எளிதாக எடுத்துச்செல்ல முடியும் என்பதால், மிக முக்கிய பிரமுகர்கள் வருகை, பொதுக்கூட்டங்கள், ரெயில்நிலையங்கள், பஸ்நிலையங்கள், முக்கிய கோவில் திருவிழா காலங்களில் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச்செல்லமுடியும். அங்கு பொதுமக்களின் உடைமைகளை எளிதில் சோதனை செய்ய முடியும். இதன் மூலம் பாதுகாக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு அனுமதியில்லாத பொருட்களை மறைத்து கொண்டு வருவதை எளிதில் கண்டறியலாம். இந்த எந்திரத்தை மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா தொடங்கிவைத்து பார்வையிட்டார்.