சரக்கு ரோப்காரில் புதிய ரோப் பொருத்தும் பணி

பழனி முருகன் கோவிலில் சரக்கு ரோப்காரில் புதிய ரோப் பொருத்தும் பணி நடந்தது.

Update: 2022-10-09 19:30 GMT

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வது வழக்கம். இதற்காக அடிவாரத்தில் கோவில் சார்பில் பஞ்சாமிர்த உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மலைக்கோவில், அடிவாரம், பஸ்நிலையம் ஆகிய இடங்களில் வைத்து விற்கப்படுகிறது. இதில், பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்ல தெற்கு கிரிவீதியில் இருந்து பிரத்யேக சரக்கு ரோப்கார் சேவை இயங்கி வருகிறது.


இந்நிலையில் இந்த ரோப்கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் சரக்கு ரோப்காரில் ஆய்வு செய்ததில் அதிலுள்ள ரோப் (கம்பிவடம்) தேய்மானம் அடைந்திருந்தது. அதையடுத்து புதிய ரோப் வாங்கி பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் பஞ்சாமிர்தம் மலைக்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய ரோப் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடர்ந்து சரக்கு ரோப் காரில் புதிய ரோப் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிந்தவுடன் சரக்கு ரோப்கார் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்