ரூ.2¾ கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி

ரூ.2¾ கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-02-18 19:15 GMT

வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் இருந்து ஆயக்காரன்புலம் வரை பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 75 லட்சத்தில் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கி சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா செந்தில்குமார் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை சிவகுருபாண்டியன், தமிழரசி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரித்விராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, கூட்டுறவு வங்கி இயக்குனர் முருகையன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் இலக்குவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், ராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்