திருக்குறுங்குடியில் புதிய சாலை- பல்நோக்கு கட்டிடம்

திருக்குறுங்குடியில் புதிய சாலை- பல்நோக்கு கட்டிடத்துக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.;

Update: 2023-02-13 20:59 GMT

இட்டமொழி:

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திருக்குறுங்குடி பெரியகுளம் கரை நம்பிக்கோவில் செல்லும் சாலை ரூ.6 லட்சம் மதிப்பிலும், 8-வது வார்டு பகுதியில் பல்நோக்கு கட்டிடம் ரூ.9.50 லட்சம் மதிப்பிலும் நிதி ஒதுக்கீடு செய்து பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

திருக்குறுங்குடி பேரூராட்சி தலைவர் இசக்கிதாய் ஞானசேகர், துணைத்தலைவர் மோளி ரவி, வார்டு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர தி.மு.க. செயலாளர் கசமுத்து, நகர காங்கிரஸ் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ரீமா பைசல், ஜார்ஜ் வில்சன், வட்டார தலைவர் வாகைதுரை, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்