ரூ.57 லட்சத்தில் புதிய சாலை- பாலம் அமைக்கும் பணி
ரூ.57 லட்சத்தில் புதிய சாலை- பாலம் அமைக்கும் பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தொடங்கி வைத்தார்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரம் பஞ்சாயத்து ராஜீவ்காந்திநகரில் ரூ.57 லட்சம் செலவில் புதிய தார் சாலை மற்றும் பாலம் அமைக்கும் பணி தொடக்கவிழா நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி, பணியை தொடங்கி வைத்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவரும், பஞ்சாயத்து கூட்டமைப்பு தலைவருமான அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார். விழாவில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.