கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-01 03:25 GMT

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து பள்ளிகள் கடந்த மாதம் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோன தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்க பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்த குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட முதன்னை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில்,

பள்ளி வளாகத்தினுள் கொரோனா விதிமுறைகளை 100 விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மாணவர்கள் அடிக்கடி சோப்பு, கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவ வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், அதிகமான மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட வேண்டும் எனவும், உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் எனவும் , தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் , வகுப்பறைக்குள் நல்ல காற்றோட்டமான சூழல் நிலவ வேண்டும் என்றும் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து அவற்றை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்