புதிய ரேஷன் கடை கட்டிடம்

முருகமங்கலம் கிராமத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடத்தை சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-06-20 14:26 GMT

சேத்துப்பட்டு

தேவிகாபுரம் அடுத்த முருகமங்கலம் கிராமத்தில் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் செலவில் புதிய ரேஷன் கட்டிடம் கட்டி உணவுப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் சங்கர், ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் அடையாளம் வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஊராட்சி மன்ற தலைவர் வாசுகி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மண்ணு ஆகியோர் வரவேற்றனர்.

ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கி புதிய ரேஷன் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

மேலும் உணவு பொருட்கள் வழங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இதில் மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ், மேற்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, தேவிகாபுரம் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் செல்வம் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்