ரூ.6 லட்சத்தில் புதிய ரேஷன் கடை; ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
களக்காட்டில் ரூ.6 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கு ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டினார்.
களக்காடு:
களக்காடு நகராட்சி 22-ம் வார்டுக்கான புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட ஞானதிரவியம் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து புதிய ரேஷன் கடை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
ஞானதிரவியம் எம்.பி. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வகருணாநிதி, யூனியன் சேர்மன் இந்திரா ஜார்ஜ்கோசல், நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், நகர துணை செயலாளர் சுபாஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.