ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

வலங்கைமான் அருகே ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை காமராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-01-08 18:45 GMT

வலங்கைமான்:

வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் தொழுவூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி மூலம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி ரேஷன் கடையை திறந்து வைத்தார்.ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் சங்கர், நீடாமங்கலம் கூட்டுறவு பால் சங்க தலைவர் இளவரசன், மாவட்ட குழு உறுப்பினர் சாந்தி தேவராஜன் உள்பட பலர் பேசினார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் சா.குணசேகரன், ஜெய இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் விஜயகுமார், இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், தாஜுனிஷா பேகம் ஹாஜாமைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.முடிவில் மாவட்ட பிரதிநிதி முனுசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்