புதிய பொது இ- சேவை மையம்
மயிலாடுதுறை கோர்ட்டு வளாகத்தில் புதிய பொது இ- சேவை மையத்தை மாவட்ட நீதிபதி திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பொதுமக்களின் வசதிக்காக பொது இ-சேவை மையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட நீதிபதி ராஜவேல் தலைமை தாங்கி புதிய இ- சேவை மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மாயகிருஷ்ணன், சார்பு நீதிமன்ற நீதிபதி கவிதா, மாயூரம் வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் ஜெகதாராஜ், மயிலாடுதுறை வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் வேலு.குபேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.