போலீஸ் சூப்பிரண்டாக மீனா பொறுப்பேற்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மீனா பொறுப்பேற்றுக்கொண்டார்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த நிஷா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மீனா நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு கூடுதல் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தொிவித்தனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மீனா, மாவட்ட கலெக்டர் மகாபாரதியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.